அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் நாட்கள் குறைப்பு : புதிய விதிகளை அறிவித்தது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்

0 2573

மெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப்படுத்தல் நாட்களை குறைத்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் 10 நாட்களுக்கு பதிலாக 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு பின் அறிகுறிகள் இல்லையெனில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்றும் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தோர் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மற்றும் 3 நாட்களுக்குப் பின்பு வரை மட்டுமே அதிக தொற்றுத்தன்மையுடன் இருப்பார்கள் என்பதால் விதிகளில் மாற்றம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments