கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
11,000 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த நீளமான 32 கிலோ மீட்டரில், தற்போது 9 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், ஐஐடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக, கான்பூர் ஐஐடியின் 54ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், நாடு விடுதலையடைந்த 75 ஆண்டுகளில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப்களைக் கொண்ட தேசமாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள 75 ஸ்டார்ட் அப்கள் உள்ள இந்தியாவில், தற்போது 50 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் கூறினார்.
அதில், பத்தாயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஆறு மாத காலத்தில் தொடங்கப்பட்டவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Comments