லூதியானா குண்டுவெடிப்பு - ஜெர்மனியில் பயங்கரவாதி ஒருவன் கைது

0 3164

லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜெர்மனியில் பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்ற அவன், காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி ஆவான். ஜெர்மனியில் பதுங்கியிருந்தவனை அந்நாட்டு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஹர்விந்தர்சிங் சந்து என்ற தேடப்படும் குற்றவாளியுடன் சேர்ந்து இவன் திட்டமிட்டிருந்தது, உளவுத்துறை விசாரணையில் ஏற்கெனவே தெரியவந்திருந்தது.

லூதியானா நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி குண்டுவெடித்ததில், ஒருவர் பலியானார். இதன் பின்னணியில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments