செனகல் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை தொடக்கம்

0 2914

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 1960-ல் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நவீன ரயில் சேவையின் தொடக்க விழாவில், செனகல் அதிபர் மேக்கி சல் கலந்துகொண்டார். இந்த ரயிலில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, அதன் முதல் பயணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments