கொரோனாவுக்கு இரு புதிய மருந்துகளுக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு கோரிக்கை

0 2522

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க பொருள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான Biological E ஆல் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் தரவுகளையும் மதிப்பாய்வு செய்ததாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரின் கீழ் இயங்கும் இந்தக் குழுவானது, கொரோனா தடுப்பு மாத்திரையான மோல்னுபிராவிரையும் பரிந்துரைத்துள்ளது.

இதற்கான இறுதி ஒப்புதல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் மூலம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments