தெருவாரியாக நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெருவரியாக நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், நியாய விலைக்கடைகளுக்கு ஜனவரி 7ஆம் தேதி பணி நாளாகவும், அதற்கு பதில் ஜனவரி 15ஆம் தேதி விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 750 அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்க வேண்டும் என்றும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களை நடமாடும் கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் நியாய விலைக்கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments