விண்வெளியில் ஆராய்ச்சி மையத்திற்கு வெளியே வந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட சீன விண்வெளி வீரர்கள்
சீன விண்வெளி மையத்தின் வீரர்கள் இருவர், இரண்டாவது முறையாக தங்கள் ஆராய்ச்சி மையத்திற்கு வெளியே வந்து பராமரிப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. சை ஸிகாங் மற்றும் யீ குவாங்ஃபு என்னும் அந்த இரு வீரர்களும், சுமார் 6 மணி நேரம் இவ்வாறு விண்வெளியில் பராமரிப்பு பணி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் இவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இவர்கள் தங்கள் 6 மாத விண்வெளி ஆய்வை முடித்துக் கொண்டு, வரும் பிப்ரவரி மாத இறுதியில் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
Comments