சண்டிகர் மாநகராட்சித் தேர்தல் ; 14 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி
சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பஞ்சாப் தலைநகர் சண்டிகர் மாநகராட்சியின் 35 கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவில், முதல்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 14 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாரதிய ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அகாலி தளம் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
Comments