ஏற்கனவே செலுத்தியுள்ள தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும், வேறுவகை தடுப்பூசியை செலுத்தக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஏற்கனவே செலுத்தியுள்ள கொரோனா தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும் என்றும், மாற்றாக வேறு வகை தடுப்பூசியை செலுத்தக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் வரும் 10ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பூஸ்டர் செலுத்துவதற்கான செயல்முறைகளை ஆராய்வதற்கான வல்லுநர்கள் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை அடுத்தே, ஒருவர் கோவேக்சின் அல்லது கோவீஷீல்ட் தடுப்பூசியை 2 டோஸ்களாக செலுத்தியிருந்தால் அதனையே பூஸ்டராக செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments