பேக்கரியில் தின்பண்டங்கள் வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேக்கரியில் தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் உரிமையாளரை மிரட்டி, தாக்கிய குடிகார கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி கைகாட்டிப்புதூரில் செயல்பட்டு வரும் அந்த பேக்கரியில் வழக்கமாக டீ சாப்பிட வந்து செல்லும் மூன்று இளைஞர்கள், நேற்று இரவும் வந்து தின்பண்டங்கள் வாங்கியுள்ளனர். மது போதையில் இருந்த அந்த கும்பல் வாங்கிய தின்பண்டங்களுக்கு பணம் கேட்ட பேக்கரி உரிமையாளரை வடமாநிலத்தவர் என சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து பேக்கரி ஊழியர்களையும் தாக்கிவிட்டு, பெயர்ப் பலகையையும் கற்களால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கெளதமன், ப்ரவீன்ராஜ், ராஜ்குமார் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments