நாட்டில் 580ஐக் கடந்த ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை
நாட்டில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 580ஐக் கடந்துள்ளது.
அதிகப்பட்சமாக, டெல்லியில் 142பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 151 பேர் சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 98.40சதவீதமாக உள்ளது.
Comments