மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0 4930

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் சென்னையில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 78. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணிக்க விநாயகம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மாணிக்க விநாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தார் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments