நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாகம் புறக்கணிக்கிறது - தலைமை நீதிபதி ரமணா
நீதிமன்றத் தீர்ப்புகளை புறக்கணிக்கும் நிர்வாகத்தின் போக்கு கவலையளிப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாவிட்டால், மக்களுக்கு நீதியை உறுதி செய்ய முடியாது என்று கூறினார்.
நீதிமன்றங்களின் மோசமான கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொலீஜியம் அமைப்பு குறித்து முன்னெடுக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் தலைமை நீதிபதி ரமணா வருத்தம் தெரிவித்தார்.
Comments