கோழி பண்ணை நிறுவனத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி ; கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோழி பண்ணை நிறுவனத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உடையாம்பாளையத்தில் இயங்கி வரும் எம்.எஸ்.என். கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்த பிரதீப்குமார் - பிரமீளா என்ற அந்த தம்பதி, பல ஆண்டுகலாக கணக்காளராக வேலை பார்த்தனர்.
திடீரென அவர்கள் நிலம், விலை உயர்ந்த சொகுசு கார், வீடு போன்று ஆடம்பரமாக வாழ துவங்கினர். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில், நிறுவன கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில், கோழி மற்றும் முட்டைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.
கோழிக் குஞ்சு மற்றும் முட்டைகளை அதிக விலைக்கு விற்று விட்டு, குறைந்த விலைக்கு விற்றதாக போலி ரசீது மூலம் கணக்கு காண்பித்தாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.
குறைந்த விலைக்கு வாங்கிய கோழித் தீவனங்களை அதிக விலையில் வாங்கியதாகவும், பண்ணை பராமரிப்பு செலவுகளை கூடுதலாகவும் கணக்குக் காட்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக 5 கோடியே 63 லட்ச ரூபாயை கேரள தம்பதி மோசடி செய்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments