இமாச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் முதன்முறையாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி
இமச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் முதன்முறையாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு வந்த 8 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல், கனடாவில் இருந்து இமாச்சல பிரதேசம் வந்த நபருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில், நாட்டில் 19 மாநிலங்களில் சுமார் 450க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments