பாலாற்றில் குளிக்கச் சென்று சுழலில் சிக்கிய 3 பேர்.. ஒருவர் சடலமாக மீட்பு, இருவரை தேடும் பணிகள் தீவிரம்
செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் உடலை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, சென்னை திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லியோன்சிங்ராஜா, அவரது மகள் பெர்சி, அண்ணன் மகன் லெனின்ஸ்டன் மற்றும் உறவினர்கள் நேற்று பாலாற்றில் குளிக்கச் சென்றனர்.
இதில் லியோன்சிங் ராஜா, பெர்சி, லெனின்ஸ்டன் ஆகிய மூவரும் சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களது உடல்களை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் முதற்கட்டமாக 16-வயதுடைய பெர்சியின் உடலை சடலமாக மீட்டுள்ளனர்
Comments