கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றச்சாட்டு

0 2904
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க சில பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி செய்தததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஃபைசர் போன்ற சில பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டினரும் நியாயமற்ற முயற்சிகளை மேற்கொண்டு பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் மீது அவதூறு ஏற்படுத்த முயற்சித்ததாக தெரிவித்தார்.

மேலும், அவர்கள் உலக சுகாதா அமைப்பிடம் பொய்யான புகார்களை தொடர்ந்து தெரிவித்து, கோவேக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயன்றதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments