லூதியானாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதி.!

0 2933

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் இருப்பது தெரியவந்துள்ளது.

35 வயதான ஹர்விந்தர் சிங் சந்து என்ற அந்த தீவிரவாதி, போலியான பெயரில், தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் வசித்து வரும் இவன், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இவனுடன், ஜெர்மனியைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்பவனும் கைகோர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில், அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில், குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசகாரச் செயல்களில் ஈடுபடவும் இருவரும் திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments