60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் முடிவுக்கு மகாராஷ்டிரம் வரவேற்பு
60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது என்கிற மத்திய அரசின் முடிவுக்கு மகாராஷ்டிர நலவாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவலால் மருத்துவ ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு எண்ணூறு டன்னாக அதிகரித்தால் ஊடரங்கு விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில் பூஸ்டர் டோஸ் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத் தக்கது எனக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே இரவுநேர ஊடங்கு நடைமுறையில் உள்ளதுடன், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டுள்ளது.
Comments