தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு மதுரை திரும்பிய பொறியியல் பட்டதாரி இளைஞர் கைது

0 31796

மத்திய அரசால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு மதுரை திரும்பிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த உதயகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்குச் சென்று துபாயிலிருந்து ஜோர்டான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து டூரிஸ்ட் விசா மூலம் ஏமன் நாட்டிற்கு சென்று பிளான்ட் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்துள்ளார். மத்திய அரசு விதிமுறைகளின்படி தடைசெய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்., அங்கு சென்று வருபவர்களை கைது செய்து கண்காணிக்கும் பணி நடைமுறையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments