முகநூல் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக மோசடி.. சைப்ரஸ் நாட்டு பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த நபர் கைது.!

0 3375

முகநூல் மூலம் பழகி சைப்ரஸ் நாட்டு பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சைப்ரஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பிய புகாரில், திருவான்மியூரை சேர்ந்த அருண்பிரசாத் என்பவர் தன்னிடம் முகநூல் மூலம் பழகி , பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தன்னுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டதாகவும், மேலும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.

புகார் தொடர்பாக மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், அருண் பிரசாத் மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments