"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வேலூரில் அடிக்கடி ஏற்பட்ட நில அதிர்வு குறித்து புவி ஆராய்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் நேரில் ஆய்வு.!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே அடிக்கடி ஏற்பட்ட நில அதிர்வு குறித்து புவி ஆராய்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தறைக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்படும் புவி சப்தம் மற்றும் நில அதிர்வு காரணமாக இப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளை பூட்டிவிட்டு பொது இடத்திலும் வீதிகளிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கணபதி, இங்கு ஏற்படும் வெடி சப்தம் நில அதிர்வினால் ஏற்படக் கூடியதாக இருந்தாலும் இதனால் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
Comments