பாரத் பயோடெக்கின் கோவாக்சின் சிறுவர்களுக்குப் பயன்படுத்த அனுமதி..

0 2454

ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த பாரத் பயோடெக் நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

கோவாக்சின் என்ற இந்த நிறுவனத்தின் உள்நாட்டு தடுப்பூசியை அரசு சிறார்களுக்குப் பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் சிறுவர்களுக்கு கோவாக்சினைப் பயன்படுத்த மத்திய அரசின் அனுமதியைக் கோரியிருந்தது.

சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கோவாக்சின் கோரிக்கைக்கு அனுமதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments