நினைவேந்தலுக்குச் சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்
நாகை மாவட்டம் கீழ வெண்மணி படுகொலை சம்பவத்தின் நினைவேந்தலுக்குச் சென்ற நாம் தமிழர் கட்சியினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கீழ வெண்மணி கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் 53ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுக்குச் சென்றிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த நினைவுச் சின்னத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் வீரவணக்க முழக்கத்தை எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், முழக்கம் எழுப்பக்கூடாது என தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Comments