உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
பால்வெளி மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்ய உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
பிரெஞ்ச் கயானாவின் கூரூ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏரியன் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புவியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
விஞ்ஞானிகளின் 30 ஆண்டுகால உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கியை கட்டமைக்க சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. மேலும், 21 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியுடன் விண்வெளி பயணத்தை தொடங்கிய இந்த தொலைநோக்கி, ஒரு மாதத்தில் நிலைநிறுத்தப்படும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தொலைநோக்கியின் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும், அதில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறியப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Comments