ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சவரம் செய்யும் இயந்திரத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட 5 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், சவரம் செய்யும் இயந்திரத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட சுமார் 491 கிராம் தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு வந்த பயணி ஒருவரின் உடைமைகளை எக்ஸ்ரே இயந்திரத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 5 தங்க பிஸ்கட்டுகள், சவரன் செய்யும் இயந்திரத்தில் கார்பன் பிளாஸ்டிக் ஷீட்டுகள் மூலம் சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments