தள்ளுவண்டியில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியீடு

0 3427
தள்ளுவண்டியில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்

விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான சிசிடிவி காட்சிகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சிறுவனின் சடலத்தின் மீது துணியால் மூடியபடி, தோளில் சுமந்து நடந்து செல்வதும், அவருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபர் கையில் டார்ச் லைட்டுடன் செல்வதும் பதிவாகி இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள 2 சிசிடிவி காட்சிகளில் ஒன்று தெளிவாக இல்லாத நிலையில், மற்றொன்றில் சிறுவனின் சடலத்தைத் தூக்கிச் சென்றதாகக் கருதப்படும் நபரும் உடன் வந்த நபரும் சடலத்தைக் கிடத்திவிட்டு வெறும் கையோடு செல்வது பதிவாகி உள்ளது.

சிறுவனை தூக்கிச் சென்ற வழியாகவே, அவர்கள் இருவரும் பேருந்து நிலையம் நோக்கிச் செல்வது போல் பதிவாகியுள்ளது. இருவரும் பேருந்தில் ஏறிச் சென்றிருக்கலாமா என்ற சந்தேகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments