சீனாவில் மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல்
சீனாவில் மேற்கத்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கூறி கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாட அரசு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கத்திய கலாச்சாரங்கள் சீனர்கள் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தி பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைப்பதால் பள்ளிகள், மதவழிபாட்டு தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பண்டிகையை கொண்டாட தடை விதித்துள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தடை விதிப்பது போல கூறப்பட்டிருந்தாலும், பின்னர் சீன பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைப்பதை மையமாக வைத்து தடை விதிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள ஆவணம் கூறுகிறது.
Comments