தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் ஜெபக்கூட்டத்திற்குல் புகுந்த மர்மநபர் பர்ஸை திருடும் சிசிடிவி காட்சி

0 2644

செங்கல்பட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் ஜெப கூட்டத்தில் புகுந்த மர்மநபர் பர்ஸை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜெபக்கூட்டத்திற்கு வந்திருந்த பிரான்சிஸ் என்பவரின் மனைவி பர்ஸை கீழே தவறவிட்டதை கவனித்த திருடன், யாரும் பார்க்காத நேரத்தில் பர்ஸை கீழே குனிந்து எடுத்துச் சென்றுள்ளான்.

அந்த பர்ஸில் ரொக்கமாக 7500 ரூபாய் பணமும், அவர்களது பெண் குழந்தைகளின் 3 சவரன் தங்கச்சங்கிலிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், அதனடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments