தேனியில் 100 ஏக்கர் அரசு நிலத்தை பட்டா மாறுதல் செய்து முறைகேடு: கோட்டாட்சியர் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது 11 பிரிவுகளில் வழக்கு

0 3949

தேனி மாவட்டத்தில் 100 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது, 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர்கள் மற்றும் தங்கள் உறவினர்கள் பெயர்களில், 100 ஏக்கர் நிலத்தை பட்டா மாற்றம் செய்தது தொடர்பான முறைகேட்டில், ஏற்கனவே கோட்டாட்சியர் ஆனந்தி, வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது தேனி குற்றப்பிரிவு டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையிலான காவல்துறையினர், கோட்டாட்சியர் ஆனந்தி மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 7 அரசு அதிகாரிகள் மீது, லஞ்சம் பெற்று ஆவணங்களை திருத்துதல், அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபருக்கு பட்டா மாறுதல் செய்தல், அரசு ஆவணங்களை தவறாக கையாளுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments