தமிழக கடலோர மாவட்டங்களில் வருகிற 28 மற்றும் 29-ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 3302

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 28 மற்றும் 29-ம் தேதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்து இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும்,  புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments