வைர வியாபாரி நிரவ் மோடிக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏலம்
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்குச் சொந்தமான, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
மும்பையிலுள்ள ரிதம் ஹவுஸ் என்றழைக்கப்படும் பங்களா, நேப்பியன்சீ சாலையிலுள்ள ப்ளாட், குர்லாவிலுள்ள அலுவலக கட்டடம் ஆகியவை ஏலம் விடப்பட உள்ளன.
இந்த ஏலத்தை நடத்துவதற்காக பொறுப்பாளர் ஒருவரையும் தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு கடந்த 2018ஆம் ஆண்டு நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார். தற்போது லண்டனில் சிறையிலடைக்கப்பட்டுள்ள இவரை தாய்நாட்டுக்குக் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Comments