இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு

0 2947

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும் டெல்லியில் 79 பேருக்கும் குஜராத்தில் 43 பேருக்கும் தெலுங்கானாவில் 38 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியானா, ஒடிசா என மொத்தம் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 415 பேரில், 115 பேர் குணமடைந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments