லுதியானா நீதிமன்றத்தில் குண்டு வெடித்து இறந்த நபரின் அடையாளம் கண்டுபிடிப்பு.!

0 2825

லுதியானா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்து உயிரிழந்த நபர் யார் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு முன்னாள் போலீஸ்காரர் என்றும் அவர் பெயர் கங்காதீப் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் சட்டவிரோதமான காரியங்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் குண்டுவெடிப்பின் போது அவர் மொபைல் போன் வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டு கழிவறைக்கு சென்ற ககன்தீப், வெடிகுண்டை செயல்படுத்தும்விதம் குறித்து யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டே தயார் செய்யும் போது குண்டு வெடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments