அதிவிரைவு ரயில் திட்டத்தை எதிர்ப்போர் பின்னர் வழிக்கு வருவர் - பினராயி விஜயன்
கேரளத்தில் அதிவிரைவு ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவோர் பின்னர் வழிக்கு வருவர் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையுள்ள 530 கிலோமீட்டர் தொலைவை ரயிலில் கடக்க இப்போது 10 மணி நேரம் ஆகிறது. அதிவிரைவு ரயில்பாதை அமைத்தால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றும், 4 மணி நேரத்தில் தொலைவைக் கடக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அது குறித்துக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், சிறப்பான எதிர்காலத்துக்கு இத்தகைய திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து அவற்றுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஆதரிப்போருக்கு மட்டுமல்லாமல் எதிர்ப்போருக்கும் திட்டங்கள் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments