ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதால் உத்தர பிரதேச தேர்தலை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை
உத்தர பிரதேச மாநில தேர்தலை ஒன்று அல்லது 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படுவதால் நீதிமன்றத்தில் கூட்டம் அதிகரிப்பதாக நீதிபதி சேகர் யாதவ் கருத்து தெரிவித்தார்.
மேலும், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனாவின் 3-வது அலை ஏற்படலாம் என்றும் மேற்குவங்க சட்டசபை தேர்தலின்போது அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்தும் நிலையில், நோய்த் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது சாத்தியமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments