போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்த்த வணிகர் வீட்டில் ரூ. 150 கோடி பறிமுதல்
உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் வணிகரின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 150 கோடி ரூபாய்ப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்ட் தயாரிப்புத் தொழில் செய்து வரும் பியூஷ் ஜெயின் என்கிற அந்த வணிகர், சரக்குகளை அனுப்ப மின்னணு வழிச்சீட்டை உருவாக்காமல், போலியாக பில்கள் தயாரித்து வரி ஏய்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அவர் வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள் பண்டல் பண்டலாகப் பணத்தாள் கட்டுகளைக் கைப்பற்றினர். எண்ணிப் பார்த்த அளவில் 150 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும், எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கான்பூரில் மட்டுமல்லாமல் மும்பையிலும் குஜராத்திலும் பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களிலும் நேற்றுத் தொடங்கிய சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.
Comments