பெண் தர மறுத்ததால் தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினீரிங் பட்டதாரி கைது

0 3449
தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினீரிங் பட்டதாரி கைது

மதுரையில் முறை பெண்ணை மணம் முடித்து கொடுக்க தாய் மாமன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இன்ஜினியரிங் பட்டதாரி, அவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளான்.

சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, தன் தாய் மாமன் பாலமுருகனிடம் அவரது மகளை மணம் முடித்து தரும்படி கடந்த 6 மாதங்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் பெண் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளான்.

வீட்டின் கதவில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்து தீ பற்றி எரிந்த நிலையில், சத்தம் கேட்டு வந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments