நீதிமன்ற குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறையா.? என்ஐஏ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை
லூதியானா நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பஞ்சாபில் லூதியானா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். பஞ்சாபில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக, மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய உளவுத்துறை 3 முறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அந்தவகையில், நீதிமன்ற குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதேநாளில் தான் கடைசி எச்சரிக்கை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசாரும், என்ஐஏ அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. லூதியானா நீதிமன்றத்தில் ஐஇடி வகை குண்டு பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் Babbar Khalsa என்ற தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, லூதியானா நீதிமன்றத்தில், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகள் 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments