இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம் எனவும், மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் அவர் ஒருவர் எனவும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்,
மேலும்,கலைச் சாதனைகளால் என்றென்றும் அவர் நினைவு கூரப்படுவார் என்றும் நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த நம்மவர் படத்தை கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments