ராஜஸ்தானில் வீடுவீடாக ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி போடும் பணியாளர்
ராஜஸ்தானில் வீடுதேடிக் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தின் ஒருபகுதியாக ஒட்டகத்தின் மீது ஏறிச் சென்று நலவாழ்வுத் துறைப் பணியாளர் தடுப்பூசி போட்டுவிட்டதை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.
இதுவரை தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து போடும் வகையில் வீடுவீடாகத் தடுப்பூசி போடும் இயக்கம் நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானின் பார்மரில் நலவாழ்வுத்துறையைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒட்டகத்தில் தடுப்பு மருந்து பெட்டியை எடுத்துச் சென்று தடுப்பூசி போட்டு விடும் படத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Comments