2022ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளிலும் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி ; உலக நலவாழ்வு அமைப்பு
உலகின் அனைத்து நாடுகளிலும் 70 விழுக்காட்டினருக்கு கொரோனா தடுப்பூசி என்னும் நிலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் எட்டப்படும் என உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடுவதில் நாடுகளிடையே நிலவும் சமத்துவமின்மை குறித்து உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் அதனோம் கீப்ரயிசஸ் செய்தியாளர்களிடம் பேசினார். ஏற்கெனவே அதிக விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்ட நாட்டில் மீண்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது, குறைந்த விகிதத்தில் தடுப்பூசி போட்ட நாடுகளுக்கான வழங்கலைப் பாதிக்கும் என்றும், இது தொற்றுப் பரவலையும் உருமாற்றத்தையும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
40 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதற்கு நாடுகளுக்கு உதவுவதே முன்னுரிமையாக இருக்கும் எனத் தெரிவித்தார். மருத்துவமனைகளுக்குச் செல்வோர், உயிரிழப்போரில் பெரும்பாலோர் தடுப்பூசி போடாதவர்கள் தான் என்றும், பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் இல்லை என்றும் அதனோம் கீப்ரயிசஸ் குறிப்பிட்டார்.
Comments