ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு
ஒமைக்ரான் கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்தே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
பத்தே முக்கால் மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 433 புள்ளிகள் சரிந்து 56 ஆயிரத்து 882 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 141 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 931 ஆக இருந்தது.
வங்கிகள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு மதிப்பு 3 விழுக்காடு வரை குறைந்தது.
Comments