முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

0 3899
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிந்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சாத்தூரில் சத்துணவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10லட்சம் பணம் வாங்கியதாகவும், வேலைக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், புகார் மீதான முகாந்திரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments