பிரதமர் மோடியுடன் காணொலி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் - மம்தா பானர்ஜி

0 3368

பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எதிரே இருப்பவர்களை பிரதமர் மோடி பேசவே வாய்ப்பளிப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். இன்று பிரதமர் மோடி தலைமையில் ரிஷி ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்த காணொலி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க முடியாது என்று கூறிய மம்தா இப்பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்றும் கூறினார்.ஏற்கனவே அடுத்த ஆண்டு அரவிந்தர் பிறந்தநாளைக் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments