சட்டமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்கும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்
சட்டமன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்கும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு பரவிக் கொண்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட தலைவர்கள் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கூட்டங்களில் பல ஆயிரம் பேர் திரள்வதால் ஒமைக்ரான் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் திரளாக கூடுவதைத் தவிர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி சேகர் யாதவ் அமர்வு, பிப்ரவரி மாதம் வரை தேர்தல் பிரச்சாரத்தைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல் தேர்தல் ஆணையமும் கூட்டம் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments