பஞ்சாப் லுதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு ; ஒருவர் பலி
பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் தற்கொலைப்படையினரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் வெடிகுண்டுகளைத் தயாரிப்பவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வேறு குண்டுகள் உள்ளனவா என்று நீதிமன்ற வளாகத்தை சோதனையிட்டனர். 24 மணி நேரத்தில் இந்த குண்டுவெடிப்பின் பின்னணி குறித்த விசாரணை அறிக்கையை தருமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா பஞ்சாப் அரசை வலியுறுத்தியுள்ளார்.
Comments