தினசரி ரசம் வைத்ததாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

0 6951
தினசரி ரசம் வைத்ததாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

சாப்பாட்டிற்கு தினசரி ரசம் வைத்தாக கூறி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கீரைத்துறையை சேர்ந்த கண்ணன் என்பவர் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று குடி போதையில் மதியம் சாப்பிடும் போது தினமும் ரசம் வைப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட கண்ணன் ஆத்திரத்தில் கட்டையால் மனைவியை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீரைத்துறை காவல்துறையினர் கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மேலும் தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments