மின்துறையில் பட்டயம் பெற்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு துணை மின் நிலையத்தில் பணி வழங்கிய பஞ்சாப் அரசு

0 4856

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு பஞ்சாப் மாநில மின்பகிர்மான கழகத்தில் பணிக்கிடைத்த சம்பவம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான மோனா-சோனா, மின்துறையில் தங்களது பட்டய படிப்பை முடித்திருந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் சண்டிகரில் உள்ள துணை மின்நிலையத்தில் ரெகுலர் டி-மேட்டாக பணிக்கு அமர்த்தி, இருவருக்கும் தலா 20,000 ரூபாயை மாத ஊதியமாக நிர்ணயித்துள்ளது.

கடந்த 20ந் தேதி பணிக்கு சேர்ந்த இருவரும் பஞ்சாப் மாநில அரசுக்கும், தங்களை வளர்த்த பிங்கல்வாரா தொண்டு நிறுவனத்திற்கும் நன்றியை உரித்தாக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments