கொரோனா பரவ குறிப்பிட்ட சமூகம் காரணம் என யூடியூபர் மாரிதாஸ் கூறியதாக சென்ற ஆண்டு பதியப்பட்ட வழக்கு ரத்து

0 4459

கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு, தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய கோரியும் மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என கூறி வழக்கை ரத்து செய்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments